பரிசோதனையை அதிகரித்ததால் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை மதுரையில் உயர்ந்துள்ளது; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை,
மேலும் மருத்துவ பணிகளை மேற்கொள்ள 730 மருத்துவர்கள், 890 செவிலியர்கள் மற்றும் 3800 களப்பணியாளர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததால் 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மாவட்டத்திற்குள் வருவோரை கண்காணிக்க 24 மணி நேரமும் வாகன சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது 1,100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதர அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளும், அரசு உத்தரவின்படி தனியார் மருத்துவமனைகளில் 800 படுக்கைகளும் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் மருத்துவ பணிகளை மேற்கொள்ள 730 மருத்துவர்கள், 890 செவிலியர்கள் மற்றும் 3800 களப்பணியாளர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story