தூத்துக்குடியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


தூத்துக்குடியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2020 4:30 AM IST (Updated: 10 July 2020 11:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நோய் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நோய் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் 51 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 31 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று பிரையண்ட்நகர் 9-வது தெருவும் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார்.

அறிவுரை

அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசின் பணிகளை ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மயிலேறும் பெருமாள் (போக்குவரத்து), அருள் (வடபாகம்), கிருஷ்ணகுமார் (தென்பாகம்) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story