‘மொபட்’ வாகனம் பறிமுதல்: திருநங்கை தற்கொலை


‘மொபட்’ வாகனம் பறிமுதல்: திருநங்கை தற்கொலை
x
தினத்தந்தி 11 July 2020 2:00 AM IST (Updated: 11 July 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

‘மொபட்’ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால், திருநங்கை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை, 

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சபீனா (வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு வள்ளுவர்க்கோட்டம் அருகே தனது மொபட் வாகனத்துடன் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு சபீனா தனது மொபட் வாகனத்தை விட்டு சென்றார். இதையடுத்து ரோந்து போலீசார் அந்த மொபட்டை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சபீனா போலீஸ்நிலையம் சென்று தனது மொபட்டை கொடுக்கும்படி கேட்டு உள்ளார். உரிய ஆவணங்களை காட்டி, எடுத்து செல்லும்படி போலீசார் அவரிடம் கூறிவிட்டனர்.

இதனால் மனமுடைந்த சபீனா கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story