மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 7,862 பேருக்கு கொரோனா மும்பையில் 90 ஆயிரத்தை தாண்டியது


மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 7,862 பேருக்கு கொரோனா மும்பையில் 90 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 July 2020 4:15 AM IST (Updated: 11 July 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 226 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 226 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

7,862 பேருக்கு தொற்று

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 7 ஆயிரத்து 862 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலத்தில் 2-வது முறையாக ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொடிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கடந்த 4-ந் தேதி 7 ஆயிரத்து 74 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவில் தொற்று நோய் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 625 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 95 ஆயிரத்து 647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

226 பேர் பலி

மாநிலத்தில் மேலும் 226 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 893 ஆக அதிகரித்து உள்ளது.

மராட்டியத்தில் இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 74 ஆயிரத்து 25 பேர் வீடுகளிலும், 46 ஆயிரத்து 560 பேர் அரசு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மும்பையில் 90 ஆயிரத்தை தாண்டியது

மும்பையில் புதிதாக 1,337 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை நகரில் 90 ஆயிரத்து 461 பேர் ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 61 ஆயிரத்து 934 பேர் குணமடைந்துவிட்டனர். 23 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல நகரில் மேலும் 73 பேர் தொற்று நோய்க்கு பலியானார்கள். இதுவரை மும்பையில் 5 ஆயிரத்து 205 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மற்ற பகுதிகள்..

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே புறநகர் - 7,666 (148), நவிமும்பை மாநகராட்சி - 10,260 (270), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 3,785 (65), பிவண்டி மாநகராட்சி - 2,832 (157), மிரா பயந்தர் மாநகராட்சி - 5,566 (183), வசாய் விரார் மாநகராட்சி - 7,236 (150), ராய்காட் - 3,734 (59), பன்வெல் மாநகராட்சி - 3,879 (92). மாலேகாவ் மாநகராட்சி - 1,168 (82). நாசிக் மாநகராட்சி - 3,925 (121), ஜல்காவ் - 4,033 (265), புனே மாநகராட்சி - 26,857 (835), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 5,250 (97), சோலாப்பூர் மாநகராட்சி - 3,008 (300), அவுரங்காபாத் மாநகராட்சி - 5,967 (288),

Next Story