விழுப்புரம் நகரில் நாளை மறுநாள் முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரையே இயங்கும்
விழுப்புரம் நகரில் நாளை மறுநாள் முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரையே இயங்கும் என்று வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் நாளை மறுநாள் முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரையே இயங்கும் என்று வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் பலருக்கு அதிதீவிரமாகவும், வேகமாகவும் கொரோனா பரவி வருகிறது.
இருப்பினும் இந்நோய் பற்றிய அச்சம் இல்லாமல் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்கிறோம் என்ற பெயரில் எப்போதும்போல் கூட்டம், கூட்டமாக சென்று முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
அந்த வகையில் விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது தொடர்பாக விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து நேற்று விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் பேசுகையில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நகரிலும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கடைகள் திறப்பு நேரம் குறைப்பு
இதன் அடிப்படையில் வணிகர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாலோசித்தனர். பின்னர், நகரில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தொற்றிலிருந்து கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விழுப்புரம் நகரில் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவது எனவும், மாலை 6 மணியுடன் அனைத்து கடைகளையும் அடைத்து ஒத்துழைப்பது வழங்குவது என்றும் ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story