மாவட்ட செய்திகள்

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா + "||" + Corona for 4 more person in Ariyalur

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 492 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 461 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அரியலூர்,

பூக்கடை நடத்தி வந்த அரியலூரை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னே, நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சென்னையில் இருந்து திரும்பி வந்த செட்டிதிருகோணத்தை சேர்ந்த 20 வயது ஆண், பொய்யூரை சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் ராயம்புரத்தை சேர்ந்த 53, 45 வயதுடைய 2 ஆண் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 549 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்த 47 வயது விவசாயி ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் கடந்த 30-ந் தேதி ஒரு துக்க காரியத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொற்று உறுதி; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
2. கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி; 1,169 பேருக்கு பாதிப்பு
கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் இன்று பலியாகி உள்ளதுடன் 1,169 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ஆந்திர பிரதேச முன்னாள் மந்திரி மாணிக்கயாள ராவ் கொரோனா பாதிப்புக்கு இன்று பலியாகி உள்ளார்.
5. பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோவுக்கு கொரோனா பாதிப்பு
பிரபல பார்முலா1 கார்பந்தய வீரர் மெக்சிகோவை சேர்ந்த செர்ஜியோ பெரேஸ் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.