ஆலங்குடி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடியில் டாஸ்மாக் கடை இல்லை. தற்போது புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க சிலர் ஏற்பாடு செய்து, கடையையும் கட்டியுள்ளனர்.
ஆலங்குடி,
கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெண்ணாவல்குடி வடக்கு அக்ரகாரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி- குளவாய்ப்பட்டி சாலையில் மண்எண்ணெய் கேன்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story