ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி: ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெற முடியும்; கலெக்டர் பேட்டி
ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி அமைய உள்ளதால், ஏழை மற்றும் எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெற முடியும் என்று கலெக்டர் பேட்டியின் போது கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு அடிக்கல் நாட்டினார். மருத்துவ கல்லூரி அமைய உள்ள ஊட்டி எச்.பி.எப். பகுதியில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவ கல்விக்கும் கோவைக்கு செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை மற்றும் எளிய மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உயர் சிகிச்சை பெறும் வகையில் ரூ.447.32 கோடி செலவில் ஊட்டியில் மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி உள்ளார்.
மேலும் 150 மாணவ-மாணவிகள் பயிலும் வகையில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. இது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வளாகம், மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் என மூன்று பிரிவுகளாக கட்டப்பட இருக்கிறது. மருத்துவமனை வளாகம் 19 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் 8 பிரிவுகளாக கட்டப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறை, மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கான 1,200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், 108 வாகன கட்டுப்பாட்டு அறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவமனை அலுவலக கட்டிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான உணவு அருந்தும் அறை, கழிப்பறை மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கான ஆசிரியர் தொகுதி கட்டிடம் மூன்று பிரிவுகளாக 9,438 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கல்வி பயில்வதற்கு தேவையான நூலக கட்டிடம், மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும், குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ முதல்வர் குடியிருப்பு, குடிமை மற்றும் துணை குடிமை மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் விடுதி கட்டிடம், மருத்துவ மாணவ-மாணவிகள் விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் உயர் தர சிகிச்சைகளை ஊட்டியில் பெற முடியும். இதற்கு காரணமான முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அடிக்கல் நாட்டும் விழாவின் நேரலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சாந்தி ராமு, கணேஷ், திராவிடமணி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், முன்னாள் அமைச்சர்கள் புத்திசந்திரன், மில்லர், என்.சி.எம்.எஸ். ராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், அ.தி.மு.க நிர்வாகிகள் பெள்ளி, பாரதியார், சரவணக்குமார், குருமூர்த்தி, துரைராஜ், கோபால்ராஜ், ஹேம்சந்த், நிர்மல் சந்த், ராம்குமார், சக்திவேல், பத்மநாதன், ராயின், சந்திரமோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story