தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி கிளைச்சிறையில் மாஜிஸ்திரேட்டு மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி கிளைச்சிறையில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார்.
கோவில்பட்டி,
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி கிளைச்சிறையில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார்.
தந்தை, மகன் சாவு
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
மாஜிஸ்திரேட்டு விசாரணை
அதன்படி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், ஏற்கனவே கோவில்பட்டி சிறை, சாத்தான்குளம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினார். கடந்த 9-ந்தேதி மீண்டும் கோவில்பட்டி சிறைக்கு சென்று வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று காலை 10.45 மணிக்கு கோவில்பட்டி கிளை சிறைக்கு மீண்டும் சென்றார். அங்கு சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்ற அறைகளில் இருந்த கைதிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் சிறை கண்காணிப்பாளர், வார்டன்களிடமும் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணையை முடித்து மாலை 3.25 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story