பிறந்தநாளையொட்டி அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்தார்
அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கயத்தாறு,
அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அழகுமுத்துக்கோன்
பிறந்தநாள்
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, சின்னப்பன் எம்.எல்.ஏ.,கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசீகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன், தங்கப்பாண்டியன், வே.கண்ணன், இ.கண்ணன், கட்டாலங்குளம் முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை கருவிகள்
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 7 ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்பு குழுக்களுக்கு வேளாண்மை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் பங்களிப்பு ரூ.2 லட்சம், மானியத்தொகை ரூ.8 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டு அனைத்து கதிர் அடிக்கும் எந்திரம் 3, களை எடுக்கும் எந்திரம் 45, பவர்பிரேயர் 9, தட்டை வெட்டும் கருவி ஒன்று, நெல் நடுவை எந்திரம் 2, புல் வெட்டும் கருவி 7, மருந்து அடிக்கும் எந்திரம், உட்பட மொத்தம் 104 வேளாண்மை கருவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். கயத்தாறு தாலுகா தெற்குமயிலோடை, ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்னகிரி, விளாத்திகுளம் தாலுகா பேரிலோன்பட்டி, கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி கிராமத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு மானியத்தொகை ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை கருவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் நீலகண்டன், தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி பொறியாளர்கள் சங்கரநாராயணன், ராஜேஸ்வரி, உதவி வேளாண்மை இயக்குனர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story