மனஅழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி நாகர்கோவிலில் நடந்தது
மன அழுத்தத்தை போக்கும் விதமாக நாகர்கோவிலில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
மன அழுத்தத்தை போக்கும் விதமாக நாகர்கோவிலில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
யோகா பயிற்சி
குமரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தொற்று போலீசாரையும் விட்டு வைக்கவில்லை. எனவே, தொடர் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அழுத்தத்தை குறைத்து ஊக்கப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை வளாக மைதானத்தில் நேற்று நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு
இதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், உதவி சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை பார்வையிட்டனர். போக்குவரத்து போலீசார், சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசார், ஊர்காவல் படை வீரர்கள் என 200-க்கும் மேற்ப்பட்டவர்கள் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது, “ சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிறகு அனைத்து போலீசாருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக மாதத்தில் அவ்வப்போது யோகா பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தற்போது யோகா பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவி வருவதால் சமூக இடைவெளியை பின்பற்றி யோகா நடந்தது. வரும் நாட்களில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படும். வடசேரி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தலைமை காவலர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் போலீஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது“ என்றார்.
Related Tags :
Next Story