பிரசவம் முடிந்து 10 நாட்களான பெண்ணுக்கு கொரோனா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
கொல்லங்கோடு பகுதியில் பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆன பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு பகுதியில் பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆன பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணுக்கு கொரோனா
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ததேயபுரம் காலனி பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது. தற்போது வீட்டில் இருக்கும் அந்த பெண் கொரோனா அச்சத்தால் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
உடனே சுகாதார துறை ஆய்வாளர்கள் சாஜன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பெண் வீட்டிற்கு சென்று தகவலை கூறிய போது ஊரில் உள்ள ஒரு சிலர் சேர்ந்து எங்கள் யாருக்கும் கொரோனா கிடையாது நீங்கள் பொய் சொல்லி எங்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பார்க்கிறீர்கள். மேலும் இங்கிருந்து ஒருவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தால் உங்களுக்கு ரூ.4 ஆயிரம் கிடைக்கும். அதனால் தான் எங்களை எல்லாம் அனுப்பி வைக்கிறீர்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூசைபுரம் காலனி பகுதியில் நேற்று முன்தினம் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 55 வயது நபரின் வீட்டில் தனிமைப்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்ட சென்ற போதும் சுகாதார பணியாளர்களை எதிர்த்து திருப்பி அனுப்பி உள்ளனர். மேலும் அதே வீட்டில் உள்ள பாதிக்கபட்ட நபரின் 22 வயது மகளுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் ஏட்டு
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கண்ணனாகம் பகுதியில் கடைகள் நடத்தி வரும் சுமார் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரிகள் எடுக்கபட்டது. இதில் கண்ணனாகம் சந்திப்பில் பழக்கடை நடத்தி வரும் 55 வயது நபருக்கு மட்டும் கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்த 3 பேரையும் சுகாதார ஆய்வாளர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்ற போது பழவியாபாரி மட்டும் உடன் செல்ல ஒத்து கொண்டார். ஆனால் மீனவ கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாதார ஆய்வாளர்கள் கொல்லங்கோடு போலீசாரின் துணையை நாடினர். அதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஒருவருடன் சுகாதார ஆய்வாளர்களும் சென்று பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story