3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி பரிசோதனை வெற்றி முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே சிறப்பாக பணியாற்றுகிறார் சரத்பவார் பேட்டி
மராட்டியத்தில் 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி பரிசோதனை வெற்றி பெற்று இருப்பதாகவும், முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே சிறப்பாக பணியாற்றுதாகவும் சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி பரிசோதனை வெற்றி பெற்று இருப்பதாகவும், முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே சிறப்பாக பணியாற்றுதாகவும் சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
சம்னாவில் சரத்பவார் பேட்டி
சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சம்னாவுக்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு பேட்டி அளித்தார். 33 ஆண்டுகால சாம்னா வரலாற்றில் மாற்று கட்சி தலைவரின் பேட்டி இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். சரத்பவாரின் பேட்டி 3 கட்டமாக பிரசுரமாக உள்ள நிலையில், முதல் கட்டம் நேற்று வெளியானது.
அதில் சரத்பவார் கூறியதாவது:-
தலைமை ஆசிரியர் பள்ளியில் தான் இருக்க முடியும். ஜனநாயகத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிர்வாகமோ, அரசோ எப்போதும் செயல்பட முடியாது. ரிமோட் கன்ட்ரோலில் எனக்கு நம்பிக்கை இல்லை. முதல்-மந்திரியும், அவரது மந்திரி சபையும் ஆட்சியை நடத்துகிறார்கள். (உத்தவ் தாக்கரே ஆட்சியை சரத்பவார் இயக்குகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அவர் இவ்வாறு கூறினார்)
உத்தவ் தாக்கரேக்கு பாராட்டு
உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி பரிசோதனை வெற்றி பெற்று உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
கூட்டணி கட்சிகள் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகளை பார்த்தேன். ஆனால் உண்மையில் அதுபோல எதுவுமில்லை. வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட 3 கட்சிகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பின்னால் இருக்கிறது. வெவ்வேறு சித்தாந்தகளை கொண்டு இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக 3 கட்சிகளும் கைகோர்த்தன. அவர்களின் பாதையில் தௌிவு உள்ளது. எனினும் அவர்களுக்கு மத்தியில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story