திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை


திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 12 July 2020 4:26 AM IST (Updated: 12 July 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர்,

வெளிப்பகுதியில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவுவதால் தற்போது கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர கொரோனா வார்டும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்கள் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 80 பேருக்கு கொரோனா சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லுரி டாக்டர்கள் கூறும்போது, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள் ஆவார்கள். இந்த பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். அதுவரை அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். 

Next Story