முறையாக ஊதியம் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை


முறையாக ஊதியம் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2020 4:47 AM IST (Updated: 12 July 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

முறையாக ஊதியம் வழங்க கோரி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

முறையாக ஊதியம் வழங்க கோரி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊதியம் குறைப்பு

திட்டக்குடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 29 பெண்கள் உள்பட 40 பேர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தூய்மை பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சியில் ஆண்களுக்கு 8 ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஆண்களுக்கு ரூ.5 ஆயிரத்து 700-ம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் சென்று கேட்டால் ஆட்குறைப்பு செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், ஊதியம் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story