தேனி மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 119 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,
ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தென்கரையை சேர்ந்த பெண் போலீஸ் உள்பட பெரியகுளம் பகுதியில் 12 பேருக்கும், டி.கள்ளிப்பட்டியில் 2 பேருக்கும், சருத்துப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் 2 வயது ஆண் குழந்தை, குழந்தையின் தாய் உள்பட 4 பேருக்கும், கோவில்பட்டியில் 3 பேருக்கும், முதலக்கம்பட்டியில் ஒருவருக்கும், தேனியில் 2 சிறுவர்கள், 3 முதியவர்கள் உள்பட 12 பேருக்கும், கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் கோடாங்கிபட்டியை சேர்ந்த நபருக்கும், கொடுவிலார்பட்டியில் 3 பேருக்கும், வீரபாண்டி, மாரியம்மன்கோவில்பட்டி ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், அரண்மனைப்புதூர், வளையபட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
உத்தமபாளையத்தில் 5 பேருக்கும், ராயப்பன்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,614 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதன்படி, ஓடைப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கம்பத்தில் போலீஸ்காரரின் மனைவி, மகள், மகன் உள்பட 26 பேருக்கும், க.புதுப்பட்டியில் 2 பேருக்கும், தேனி ஆயுதப்படை பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுபவர் உள்பட கூடலூரில் 3 பேருக்கும், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போடியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை, 3 முதியவர்கள் உள்பட 16 பேருக்கும், போடி திருமலாபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கும், போடி நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பூதிப்புரத்தை சேர்ந்தவர் உள்பட பூதிப்புரத்தில் 4 பேருக்கும், சின்னமனூரில் 70 வயதை கடந்த முதியவர்கள் 2 பேர் உள்பட 9 பேருக்கும், முத்துலாபுரத்தில் 2 பேருக்கும், சீப்பாலக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தென்கரையை சேர்ந்த பெண் போலீஸ் உள்பட பெரியகுளம் பகுதியில் 12 பேருக்கும், டி.கள்ளிப்பட்டியில் 2 பேருக்கும், சருத்துப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் 2 வயது ஆண் குழந்தை, குழந்தையின் தாய் உள்பட 4 பேருக்கும், கோவில்பட்டியில் 3 பேருக்கும், முதலக்கம்பட்டியில் ஒருவருக்கும், தேனியில் 2 சிறுவர்கள், 3 முதியவர்கள் உள்பட 12 பேருக்கும், கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் கோடாங்கிபட்டியை சேர்ந்த நபருக்கும், கொடுவிலார்பட்டியில் 3 பேருக்கும், வீரபாண்டி, மாரியம்மன்கோவில்பட்டி ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், அரண்மனைப்புதூர், வளையபட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
உத்தமபாளையத்தில் 5 பேருக்கும், ராயப்பன்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,614 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story