தஞ்சை, நாகை, திருவாரூரில் இன்று முழு ஊரடங்கு
தஞ்சை, நாகை, திருவாரூரில் இன்று எந்தவித தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில் அத்தியாவசிய கடைகளான மருந்து கடைகள், மளிகை கடைகள், பால் பூத் நிறுவனங்கள் மட்டும் செயல்பட்டன. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் அவ்வப்போவது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
முதலில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆட்டோக்கள், கார்கள் இயங்கின. பொது போக்குவரத்துக்கான பஸ்களும் இயங்கின. மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா தலங்கள் மற்றும் நகர் பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. கிராம பகுதிகளில் மட்டுமே கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை மட்டும் அல்லாது பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு பஸ் போக்குவரத்தை வருகிற 15-ந் தேதி வரை நிறுத்தி உள்ளது. இயக்கப்பட்ட சில சிறப்பு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
இதர மாவட்டங்களில் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி 2-வது வாரமான இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இன்று எந்த போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்களும் எக்காரணத்தை கொண்டு வெளியில் வரக்கூடாது. அவசரம் மற்றும் ஆஸ்பத்திரி தேவைகளுக்காக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி போலீசாரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story