காஞ்சீபுரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


காஞ்சீபுரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 July 2020 6:54 AM IST (Updated: 12 July 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

சிங்காரம் பூக்கடைசத்திரத்தில் பல ஆண்டுகளாக பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் கிழக்கு ராஜவீதியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 40). இவர் பூக்கடைசத்திரத்தில் பல ஆண்டுகளாக பூ கட்டும் தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் பூ கட்டும் இடத்தில் அமர்ந்திருந்தார். பின்னர் கீழே இறங்கும் போது மின்கசிவால் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சிங்காரத்துக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், பூர்ணிமா (12), யுவஸ்ரீ (11) என 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story