அமலைச் செடிகள் நிறைந்த தென்காசி சிற்றாறு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அமலைச் செடிகள் நிறைந்த தென்காசி சிற்றாறு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2020 3:30 AM IST (Updated: 13 July 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி சிற்றாற்றில் நிறைந்துள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி, 

தென்காசி சிற்றாற்றில் நிறைந்துள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிற்றாறு

குற்றாலம் அருவியில் இருந்து விழும் தண்ணீர் தென்காசி சிற்றாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் தென்காசி யானை பாலம் பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் போன்ற இடங்களில் பொதுமக்கள் முன்பு குளித்து வந்தனர்.

இதனை பொதுமக்கள் நீண்டகாலம் பயன்படுத்தி வந்தனர். இளைஞர்கள் நீச்சலடித்து குளிப்பார்கள். மேலும் தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு புனித நீர் இங்கிருந்து எடுக்கப்படுகிறது. இந்த ஆற்றின் மண்டபத்தில்தான் திருவிழா நாட்களில் அம்மன் கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்படும்.

அகற்றக்கோரிக்கை

தற்போது இந்த ஆற்றில் அமலை செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஆற்று நீரும் மாசுபட்டுள்ளது. மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் தென்காசியில் உள்ள இந்த சிற்றாற்றின் நிலையை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அமலைச் செடிகளை அகற்றி சுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story