மாவட்ட செய்திகள்

ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லைதந்தைக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + To the student showing pornographic images Sexual harassment

ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லைதந்தைக்கு போலீஸ் வலைவீச்சு

ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லைதந்தைக்கு போலீஸ் வலைவீச்சு
செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,

செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜிப்மர் ஊழியர்

புதுச்சேரியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். போதை மருந்துக்கு அடிமையான இவர் தனது மனைவி மற்றும் மகள் முன் அடிக்கடி செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கண்டித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆபாச படங்களை தனது மனைவி மற்றும் மகளையும் பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆபாச படங்களை காண்பித்து மனைவியிடம் அவர் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். குளித்து விட்டு வெளியே வரும்போது, மகள், மனைவி முன்பு நிர்வாணமாக வந்து நின்று அதன்பிறகு உடைகளை மாற்றியுள்ளார்.

வலைவீச்சு

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தனது அருகில் படுத்திருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி கண்விழித்து கணவரின் செயலை கண்டித்து தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி தனது மனைவியை தாக்கியுள்ளார். தட்டிக் கேட்ட மகளையும் அடித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் தந்தை மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.