ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு
டாக்டர், ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 148 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
டாக்டர், ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 148 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,835 ஆக உயர்ந்தது.
தனியார் மருத்துவமனை டாக்டர்
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர் மற்றும் அவருடன் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவில் டாக்டர், 2 நர்சுகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
148 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரிந்து வரும் 45 ஊழியர்கள் நேற்று முன்தினம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 2 ரேஷன்கடை ஊழியர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. வேலூர் சின்னஅல்லாபுரத்தில் 2 வயது பெண்குழந்தை, கொசப்பேட்டையில் 3 வயது பெண்குழந்தை, பொய்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேர், கொசப்பேட்டையில் 92 வயது முதியவர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 148 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,728 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,526 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story