காஞ்சீபுரம் நகராட்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் 26-ந் தேதி வரை முழு ஊரடங்கு கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், 26-ந் தேதி வரை முழு ஊரடங்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தபகுதியில் இதுவரை 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் 6 ஆயிரத்து 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நிமித்தமாக வெளியே சென்று வருவதால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொற்று பரவவும், பிற பகுதிகளில் இருந்து மேற்கண்ட பகுதிக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த பகுதிக்கு உட்பட்ட 21 தெருக்களையும் வருகிற 26-ந்தேதி இரவு 12 மணி வரை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த பகுதி மக்களுக்கு வீடு, வீடாக சென்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story