போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்புக்குழு: புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பேட்டி
மதுரை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மணிவண்ணன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த சுஜித்குமார் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் மணிவண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் குற்றங்களை தடுத்து சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதுபோல், கொரோனா தடுப்பு பணிகளும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியும் சிறப்பாக செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களுக்கான பிரச்சினைகள் குறித்து 24 மணி நேரமும் என்னை எப்போது வேண்டுமானலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். இதுபோல், பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்படும்.
மதுரை மாவட்டத்தில் 36 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து போலீசாரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறார் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்படும். ஊரடங்கு அமலில் இல்லாத மதுரையின் பிற பகுதிகளில் சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story