முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு: வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடின
மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடின.
புதுக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை நகரில் வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜ வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் உழவர்சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.
மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் டாக்சிகள், ஆட்டோக்களும் இயங்கவில்லை. மேலும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சாலைகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் மட்டும் ஆங்காங்கே நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
ஆலங்குடியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் மீன் கடைகள், இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியையும் மறந்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது. மணமேல்குடி பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளும் மூடப்பட்டிருந்தன. ஆவுடையார்கோவிலில் மருந்து கடை, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
திருவரங்குளம், கேப்பறை, மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, வம்பன் நால்ரோடு, வல்லத்திராக்கோட்டை, பூவரசகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் டீக்கடை மட்டும் திறந்திருந்தது. இருசக்கர வாகனங்களில் சிலர் சென்று வந்ததை காண முடிந்தது.
அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம், கே.புதுப்பட்டி, ஏம்பல், கீழாநிலைக்கோட்டை, ராயவரம், கடியாபட்டி, நமணசமுத்திரம், கல்லூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகளும் செயல்படவில்லை. பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கினார்கள். சில இடங்களில் மருந்து கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கால் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை இல்லாததால் விவசாயிகள் சிறிது நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேபோல் மாவட்ட பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
கீரனூர்- களமாவூர் அக்னீஸ்வரர் கோவில் சார்பில் நேற்று முழு ஊரடங்கையொட்டி சாலையோரங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் போன்ற பகுதிகளில் இருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
ஆதனக்கோட்டை அருகே பெருங்களூர் ஊராட்சியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பெருங்களூர் பகுதியில் 4 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று வரை அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தலைமையில் நவீன எந்திரத்தின் மூலம் அனைத்து வீதிகளிலும் வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பெருங்களூர் மருத்துவ அலுவலர் தங்கத்துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story