மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின
நாமக்கல் மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வருகிற 31-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவமனைகள், மருந்து கடைகள் மற்றும் ஆவின் பாலகம் தவிர மீதமுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் மெயின்ரோடு, திருச்சி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனூர் சாலை, சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை என அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகள் திறந்து இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.
ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஒரு சிலரை எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் நகர் முழுவதும் அமைதி நிலவியது. முழு ஊரடங்கையொட்டி நேற்று உழவர்சந்தைகளும் மூடப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதே நிலைதான் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர் மற்றும் பள்ளிபாளையம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் 100 சதவீதம் முழு ஊரடங்கு நிலவியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story