சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் புதிய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பேட்டி
சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தன்னிடம் தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அருளரசு கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. மேற்கு மண்டலத்தை பொறுத்த வரையில் கொரோனா தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் முன்கள வரிசையில் பணியாற்றும் போலீசாரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
கடந்த 100 நாட்களை தாண்டி போலீசார் தன்னார்வத்துடன் பணியாற்றி வந்தாலும், அவர்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. அந்த உந்துதலை கொடுக்க உள்ளேன். மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணி முடிவில்லாத பணி போல இருந்து வருகிறது.
இதே காலகட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் போன்றவற்றையும் செய்ய வேண்டி உள்ளது. இதை ஒரு குழுவாக தான் செய்ய முடியும். எனவே குழு உறுப்பினர்களின் திறனை அதிகரிக்க வேண்டும். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் வாங்கி வரும் நபர்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியே வந்தால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணிகாத்து, குற்றங்களை குறைத்து நாமக்கல் மாவட்டம் அமைதியான மாவட்டமாக திகழ எனது உழைப்பு இருக்கும்.
குற்ற சம்பவங்களை குறைய கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்களை கண்டால் 24 மணி நேரமும் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். அது சரியான தகவலா? இல்லை தவறானதா? என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். கொரோனா தடுப்பு பணியை பொறுத்த வரையில் பிற மாவட்டங்களில் இருந்து தேவையின்றி வருவதை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற இவர் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.
பின்னர் அரக்கோணம், கமுதி போன்ற பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் முதன் முதலாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகும்.

Related Tags :
Next Story