தொற்று பாதித்தவர் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தகோரி சங்கரன்கோவிலில் பொதுமக்கள் போராட்டம்

தொற்று பாதித்தவர் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தகோரி சங்கரன்கோவிலில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2020 3:30 AM IST (Updated: 14 July 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெட்சுமியாபுரம், கோமதியாபுரம் போன்ற தெருக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெட்சுமியாபுரம், கோமதியாபுரம் போன்ற தெருக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இங்கு வசிப்பவர்கள் அனைவரும் தினசரி வேலைக்கு செல்லக்கூடியவர்கள். இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் லெட்சுமியாபுரம் 4-வது தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக காலையில் வெளியே செல்ல முடியாததால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 

இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டை சுற்றி மட்டும் தனிமைப்படுத்தக்கோரி நேற்று அவர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் வராததால் பெண்கள் அங்கு கட்டப்பட்டிருந்த இரும்பு தகரத் தடுப்புகளை அவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடுப்புகளை குறிப்பிட்ட பகுதியில் இருந்து தள்ளிப் போடுவதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story