மும்பையில் 70 சதவீதம் கொேரானா நோயாளிகள் குணமடைந்தனர் பாதிப்பு எண்ணிக்கையும் குறைகிறது
மும்பையில் 70 சதவீதம் கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
மும்பை,
மும்பையில் 70 சதவீதம் கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
6,497 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 497 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்து 924 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துவிட்டனர். 1 லட்சத்து 5 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 193 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் நோய் பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 482 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை நிலவரம்
மும்பையில் மேலும் 1,158 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 146 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மும்பையில் ஆட்கொல்லி நோய்க்கு மேலும் 47 பேர் பலியானார்கள். இதனால் நகரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே மும்பை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
70 சதவீதம் பேர் குணமடைந்தனர்
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “மும்பையில் சமீப காலமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1,400 ஆக இருந்தது. தற்போது அது சராசரியாக 1,200 ஆக குறைந்து உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு காலம் 51 நாட்களாக அதிகரித்து உள்ளது. இதுதவிர ஜூலை 1-ந் தேதி வரையிலான நிலவரப்படி கொரோனாவுக்கு குணமடைந்தோர் சதவீதம் 57 ஆக இருந்தது. தற்போது அந்த 70 சதவீதமாக உயர்ந்து உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மும்பையில் தற்போது 30 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் மும்பை நகர் விரைவில் கொரோனாவில் இருந்து மீளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
மற்ற பகுதிகள்
மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் இதுவரை கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-
தானே மாநகராட்சி- 15,110 (582 பேர் பலி), தானே புறநகர்- 8,656 (164), நவிமும்பை மாநகராட்சி- 11,085 (295), உல்லாஸ் நகர் மாநகராட்சி- 4,615 (75), பிவண்டி மாநகராட்சி- 3,024 (174), மிரா பயந்தர் மாநகராட்சி- 6,183 (198), வசாய் விரார் மாநகராட்சி- 8,182 (172), ராய்காட்- 4,457 (63),
பன்வெல் மாநகராட்சி- 4,408 (101). மாலேகாவ் மாநகராட்சி- 1,200 (85). நாசிக் மாநகராட்சி- 4,399 (143), ஜல்காவ்- 4,618 (291), புனே மாநகராட்சி- 29,612 (897), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி- 6,815 (123), சோலாப்பூர் மாநகராட்சி- 3,411 (315), அவுரங்காபாத் மாநகராட்சி- 6,454 (304).
Related Tags :
Next Story