எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 399 பள்ளிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல்,
நாளை (புதன்கிழமை) முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடக்கிறது.
அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 27 ஆயிரத்து 126 பேருக்கும், பிளஸ்-2 மாணவர்கள் 20 ஆயிரத்து 326 பேருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் மொத்தம் 47 ஆயிரத்து 452 மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை, வகுப்பு வாரியாக பிரித்து வைக்கும் பணியில் நேற்று ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story