வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 14 July 2020 5:31 AM IST (Updated: 14 July 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் தட்டுப்பாட்டால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. அதனால் வடக்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் மதிவாணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாதவன், விவசாயிகள் ராமச்சந்திரன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மனு

பின்னர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜை சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட செயற்பொறியாளர் சாம்ராஜ், விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர், உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அவர்கள் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜனையும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விட்டு சென்றனர்.

Next Story