கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 14 July 2020 6:15 AM IST (Updated: 14 July 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன் திருச்சி மாவட்டத்துக்கும், அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இதையடுத்து நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 2-வது போலீஸ் சூப்பிரண்டு இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதைத்தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள பொதுமக்களுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டால் உடனுக்கு உடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். மாவட்டம் அமைதியாக இருக்க சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுவதோடு, விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

Next Story