வேதாரண்யம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்
வேதாரண்யம் பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள். அதே நேரத்தில் பார் வசதி இல்லாததால் மது பாட்டில்களை வாங்கிச்சென்று பொது இடங்களில் வைத்து குடித்து வருகிறார்கள்.
இவ்வாறு குடிக்கும் மதுபிரியர்கள் குடிபோதையில் தாங்கள் குடித்த மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இது சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. அதே நேரத்தில் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதாக மதுபிரியர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு கூடுதல் விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? அல்லது தெரியாமல் நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் இந்த விலை உயர்வு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story