கிருஷ்ணகிரிக்கு, நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அறிக்கை
கிருஷ்ணகிரிக்கு நாளை (புதன்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் நாளை காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பியூலா ராஜேஷ், கலெக்டர் பிரபாகர் மற்றும் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசு உயர் துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story