மராட்டியத்தில், மேலும் 6,741 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில், மேலும் 6,741 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2020 3:45 AM IST (Updated: 15 July 2020 8:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்ெகால்லி கொரோனா வைரஸ் வேமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 741 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 665 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 7 ஆயிரத்து 665 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 213 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 695 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பையில் நேற்று புதிதாக 954 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகாில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 100 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 66 ஆயிரத்து 633 பேர் குணமடைந்து உள்ளனர். 22 ஆயிரத்து 773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 70 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் 5 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாவட்ட வாரியாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள், அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே- 65,324 (1,769 பலி), ராய்காட்- 9,110 (167), ரத்னகிரி- 916 (32), புனே- 42,092 (1,152), சோலாப்பூர்- 4,478 (357), நாசிக்- 7,663 (306), ஜல்காவ்- 6,355 (361), அவுரங்காபாத்- 8,659 (345), ஜால்னா- 1,084 (47), கோலாப்பூர்- 1,322 (20), அகோலா- 1,900 (95), நாக்பூர்- 2,156 (23).

Next Story