விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாருக்கு திருமண நாளன்று விடுமுறை திட்டம்; சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாருக்கு திருமண நாளன்று விடுமுறை அளிக்கும் திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
காவல்துறையினர் அதிக பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில சமயங்களில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டும், போலீசாரை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களுடைய திருமண நாளுக்கு வாழ்த்து அட்டையுடன் விடுமுறை அளிக்கும் புதிய நடைமுறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் அமல்படுத்தியுள்ளார்.
இதன் தொடக்கமாக நேற்று முன்தினம் திருமண நாள் கொண்டாடிய 5 போலீசாருக்கு ஒரு நாள் முன்பாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போலீசார் தங்களது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. எனவே அவர்களது மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் திருமண நாளன்று விடுமுறை அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசார் அனைவரும் தங்களது திருமண நாளன்று விடுமுறை எடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடலாம். அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 போலீசாருக்கு மட்டும் விடுமுறை வழங்க வேண்டியிருக்கும். இதனால் வழக்கமான காவல் பணி எந்த வகையிலும் பாதிக்காது.
மேலும் போலீசாரின் திருமண நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே அவர்களது வீட்டிற்கு வாழ்த்து அட்டை சென்று சேரும். திருமணமாகாத போலீசாருக்கு அவர்களது பிறந்த நாளுக்கு விடுமுறையும், வாழ்த்து அட்டையும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.

Related Tags :
Next Story