ஓ.பன்னீர்செல்வம் மகன் செய்த உதவி: பாலமேட்டில் பிரிந்து சென்ற பசு மாடு கோவில் காளையுடன் சேர்ந்தது
மதுரை பாலமேடு அருகே பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து கோவில் காளை ஒன்று பாசப்போராட்டம் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நடவடிக்கையால் அந்த மாடுகள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.
அலங்காநல்லூர்,
மதுரை பாலமேட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசு மாடும், பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை சுவாமி கோவில் காளையும் இணைபிரியாமல் ஒன்றாக சுற்றி வந்தன. சாப்பிடும் போதும் ஒன்றாகவே அந்த மாடுகள் இருந்தன. இந்த நிலையில் அந்த பசு மாட்டை ராஜா வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
இதனால் அந்த பசுமாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றியபோது அதன் பிரிவை தாங்க முடியாத காளை மாடு வாகனத்தை எடுக்க விடாமல் அங்கேயே நீண்ட நேரம் நின்றது. பின்னர் வாகனம் கிளம்பியதும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்றது.
தன்னுடன் ஒன்றாகவே இருந்த பசு மாட்டை விட்டு பிரிய மறுத்து காளை மாடு நடத்திய பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இந்த காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதனைப் பார்த்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பாலமேட்டுக்கு வந்து அந்த 2 காளைகளையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தார்.
அவர் விற்கப்பட்ட பசுமாட்டை தனது சொந்த செலவில் எட்டையாபுரத்தில் இருந்து வாங்கி மஞ்சமலை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அந்த மாட்டை பராமரிப்பதற்கு தேவையான நிதியையும் அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து காளை மாட்டையும், பசுமாட்டையும் அலங்கரித்து ஒன்றாக நிற்க வைத்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story