கிருஷ்ணகிரிக்கு, இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அறிக்கை
கிருஷ்ணகிரிக்கு இன்று (புதன்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒழிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் விளங்கி வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தினமும் ஏராளமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா இருப்பவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து அவர்கள் குணமடைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் வழங்கி, ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டம், இன்று (புதன்கிழமை) கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.
மேலும் ரூ.20.20 கோடி மதிப்பில் ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story