மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருபுவனை,
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பால் 42 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மதகடிப்பட்டு கடை வீதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இதில் கொம்யூன் பஞ்சாயத்து உதவிப்பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story