சிறுமியை மிரட்டி கற்பழித்த 6 பேர் கைது


சிறுமியை மிரட்டி கற்பழித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-16T05:19:27+05:30)

சிறுமியை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி உள்பட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோலாப்பூர்,

கோலாப்பூரை சேர்ந்த சிறுமி தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாள். அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பியான சுபம்(வயது27), வைபவ் (25) அந்த சிறுமியுடன் பழகி வந்தனர். இந்தநிலையில் இவர்கள் சம்பவத்தன்று சிறுமியை மிரட்டி கற்பழித்தனர். மேலும் இதனை செல்போனில் பதிவு செய்தனர்.

இதையடுத்து 2 பேரும் சேர்ந்து தனது நண்பர்களிடம் உல்லாசமாக இருக்கும்படி சிறுமியை மிரட்டி உள்ளனர். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தால் செல்போனில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டினர்.

இதனால் பயந்துபோன சிறுமி வேறு வழியின்றி அவர்கள் கூறியதற்கு சம்மதித்ததால், மேற்கண்ட காமூக அண்ணன்-தம்பியின் நண்பர்களும் சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தன்று தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதாள்.

இதையடுத்து சிறுமியின் தாய் சம்பவம் குறித்து சாகுபுரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சுபம் மற்றும் அவரது தம்பி வைபவை கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி கேத்தன் ஜாதவ் (27), விஜய் விலாஸ் (32), சுனில் பிங்கலே (26), சேகர் மாதவ் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story