வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் பெண் டாக்டர், நகைக்கடை ஊழியர் உள்பட 280 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் பெண் டாக்டர், நகைக்கடை ஊழியர் உள்பட 280 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2020 10:30 PM GMT (Updated: 2020-07-16T07:17:18+05:30)

அரசு பெண் டாக்டர், நகைக்கடை ஊழியர் உள்பட 280 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 3,433 ஆக உயர்ந்தது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் உச்சகட்டமாக நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

வேலூர் அலமேலு மங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் டாக்டருக்கு கொரோனா அறிகுறி காணப் பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். அவரின் குடும் பத்தினர் தனிமைப்படுத்தப் பட்டனர்.

டாக்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பே விடுமுறையில் சென்றதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்படவில்லை. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 2 டாக்டர்கள் கொரோனா வினால் பாதிக் கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பணிபுரிந் தவர்கள் மற்றும் குடும்பத்தினர் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் அண்ணாசாலை ஊரீசு கல்லூரி எதிரே உள்ள நகைக்கடை ஒன்றில் பணி புரிந்து வந்த 25 வாலிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த 40 பேருக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டனர். நகைக் கடை முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக் கையாக நகைக்கடை மூடப் பட்டது.

வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர், கொரோனா தொற்றால் இறந்த நபரின் இறுதிசடங்கில் பங்கேற்ற வேலப்பாடியை சேர்ந்த ஆண்நபர் வேலூர் மாநகராட்சி பகுதியில் 106 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 280 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 280 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் வரும்வரை வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 3,153 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த 280 பேர் மூலம் 3,433 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை என பல்வேறு பகுதிகளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 478 ஆக உயர்ந்துள்ளது.


Next Story