ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,347 ஆக உயர்வு


ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,347 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 July 2020 10:15 PM GMT (Updated: 16 July 2020 1:47 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 குழந்தைகள் உள்பட 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட் டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,347 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்தும், சமூக இடை வெளியை கடைப்பிடித்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை யும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,347 ஆக உயர்ந்துள்ளது.

எஸ்.வி.நகரத்தில் 7 பேர், போளூர், கலசபாக்கத்தில் தலா 4 பேர், ஆரணியில் 20 பேர், நாவல்பாக்கம், தெள்ளாரில் தலா 15 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 11 பேர், ஆக்கூரில் 8 பேர், வந்தவாசியில் 12 பேர், பெருங்கட்டூரில் 14 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள் ளனர். இதில் பிறந்து 15 நாட்களேயான ஆண் குழந்தை மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் அடங்கும்.

இதனையடுத்து அவர்கள் 124 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனை மற்றும் முகாம்களில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர் புடையவர்கள், குடும்பத் தினருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப் பட உள்ளது.

ஆரணியை அடுத்த கீழ்நகர் கிராமத்தை சேர்ந்த 31 வயது வாலிபர், அவரது மனைவி, இவர்களது 4 வயது பெண் குழந்தை மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, சேவூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், 59 வயது ஆண், 27 வயது பெண், புதுப்பட்டு ஊராட் சியில் 33 வயது பெண், புதுப்பேட்டை பகுதியில் 33 வயது பெண், அரையாளம் கிராமத்தில் 70 வயது மூதாட்டி, விண்ண மங்கலத்தில் 57 வயது பெண், இரும்பேடு இந்திரா நகர் பகுதியில் 27 வயது வாலிபர், ஆரணி அருந்ததி பாளை யத்தை சேர்ந்த 40 வயது பெண், 64 வயது மூதாட்டி, ஆரணி கொசப் பாளையம் களத்துமேட்டு தெரு பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், பர்வதராஜகுல தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண், ஆரணி தணிகாசலம் தெருவை சேர்ந்த 29 வயது பெண், ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநாகநதி தெருவை சேர்ந்த 18, 20 வயதுடைய அக்காள்-தங்கை ஆகிய 21 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பப் பட்டனர்.

போளூர் வீரப்பன் தெருவில் வசிக்கும் 40 வயது கார் டிரைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண் ணாமலை பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போளூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற ஊழியர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை யடுத்து கோர்ட்டு வருகிற 19-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் மேற் பார்வையில் தடுப்புகள் அமைத்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.

போளூர் நகரில் இந்திரா நகர், சாவடி தெரு, நேரு தெரு உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் நேற்று நடமாடும் மருத்துவ குழு டாக்டர் கார்த்திக் தலைமையில் செவிலியர் தயா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் நேரு ராமகிருஷ்ணன் மற்றும் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடும்பத்தினர் எண்ணிக்கை, உடல் நலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தாசில்தார் ஜெயவேல் பார் வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினார்.

மேலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் மேற்பார்வையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story