ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,907 ஆக உயர்வு


ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,907 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 July 2020 3:45 AM IST (Updated: 16 July 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. - இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,907 ஆக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மொத்தம் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,907 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 2,258 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,963 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story