பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போது இல்லை கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொலைக்காட்சி மூலம் மாணவ-மாணவிகள் கல்வியைக் கற்றுக் கொள்ளும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இன்னும் 3 நாட்களில் 14 தொலைக்காட்சி சேனல்களில் மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியும். தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் வைபை மற்றும் இண்டர்நெட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், வீட்டிலிருந்தே கல்வியைக் கற்றுக் கொள்ளவும், சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், க்யூ ஆர் கோடு, யூ டியூப் மூலமாகவும் மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தான் பாடம் நடத்துவார்கள்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் போல பாடங்கள் குறைக்கப்படுமா? என்று கூற முடியாது. மாணவர்கள் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் படிப்பதே நல்லது. பெற்றோர்களும் அவர்களை கண்காணிக்க முடியும். பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போது இல்லை. இதற்காக தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்துக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story