எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது
மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது.
கரூர்,
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வினியோகிக்கும் பணியை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 343 பேருக்கும், பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 6 ஆயிரத்து 344 பேருக்கும் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
மேலும் பிளஸ்-2 மாணவர்கள் எளிமையாக பாடங்களை புரிந்துகொள்ளும் வகையில், பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றினை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியில் நாள் ஒன்றுக்கு 20 மாணவர்களுக்கு வீதம் காப்பி செய்து கொடுக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது.
அதேபோன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பிற்கு பிறகு வழங்குவதற்காக சீருடைகள் வாகனங்களில் வந்தன. அவை இறக்கி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவடிவு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story