விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இன்று வரவேற்பு


விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இன்று வரவேற்பு
x
தினத்தந்தி 16 July 2020 12:58 PM IST (Updated: 16 July 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று வரவேற்பு அளிக்கிறார்கள்.

சிவகாசி,

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை நியமித்தது. இதை தொடர்ந்து அவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து கார் மூலம் விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) வருகிறார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்க மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்து ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story