பிறந்த நாள் விழா: காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விருதுநகர்,
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா, முன்னாள் நகர செயலாளர்கள் முத்துராஜ், எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர பொருளாளர் கருமாரி முருகன், துணைச் செயலாளர் வன்னியரசு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அங்குராஜ் ,நடராஜன், மாவட்ட கவுன்சிலர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளவாய்புரம் அருகே முகவூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் காமராஜர் பவனம் டிரஸ்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி காமராஜர்புரம் காலனியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் முருகன் செய்திருந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் நாரணாபுரம், அரசன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர். சிவகாசி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க. பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நகர ஜெயலலிதா பேரவை மற்றும் காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அனுப்பன்குளம், பேராபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன், ஜப்பார், முன்னாள் வட்டார தலைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் சுப்புக்காளை, கவுன்சிலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாயில்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நாட்டாண்மை பாஸ்கரன் முன்னிலையில் பனங்காட்டு படை கட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராஜவர்மன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு அரிசி பைகளை வழங்கினார். ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தாயில்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், கிளை செயலாளர்கள் மகேஷ், சந்திரசேகரன், சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற தலைவர் கோடீஸ்வரன் செய்திருந்தார். காமராஜர் நற்பணி மன்றத்தின் செயலாளர் காளிராஜ் நன்றி கூறினார்.
வத்திராயிருப்பில் காமராஜர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்குமார், தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வத்திராயிருப்பு நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் காமராஜரின் பிறந்தநாள், தமிழக மீட்புநாள் உறுதிமொழியுடன் நடைபெற்றது. மாவட்டதலைவர் மீனாட்சி சுந்தரம், வட்டார தலைவர் வைரவசாமி ஆகியோர் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுசெயலாளர் பால்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மோகன், கருப்பசாமி, பாலமுருகன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story