12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை


12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை
x
தினத்தந்தி 16 July 2020 10:15 PM GMT (Updated: 17 July 2020 1:07 AM GMT)

மராட்டியத்தில் நேற்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்து உள்ளன.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மும்பையில் தமிழர்கள் நிா்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்து உள்ளன. மும்பை தாராவியில் தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி அறிவியல் பிரிவில் 100 சதவீத தேர்ச்சி அடைந்து உள்ளது. தேர்வு எழுதிய 39 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். இதேபோல வணிகவியல் பிரிவில் தேர்வு எழுதிய 61 பேரில் 59 பேர் (96.72 சதவீதம்) தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்து உள்ளனர்.

அறிவியல் பிரிவில் மாணவி தர்ஷினி விவேகானந்த் 85.54 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும், செய்யது சுபியான் 84.15 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், சுதார்ஷினி ராஜன் 78.15 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர். வணிகவியல் பிரிவில் இமயதுல்லா முகமது 88.62 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், மாரியப்பன் கணபதி 86 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஜன்னத் சோனியா மோதி ஜெயகுமார் 76.92 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.

பாண்டுப் பிரைட் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் அறிவியல் பிரிவில் 100 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 96.36 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். வணிகவியல் பிரிவில் உம்மிசார்கா அஸ்ரப் 545 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், ஷினி பிராச்சி 533 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடமும், பிசி சீமா 523 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனர்.

அறிவியல் பிரிவில் சஞ்சனா கன்கயா 414 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், அகான்சா 391 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடமும், சுதர் மிதால் நரேந்திரா 359 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனர்.

தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரை பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், கல்லூரி முதல்வர் செலின் ஜேக்கப், தலைமை ஆசிரியர் ஜெஸ்டினா ஜேம்ஸ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

காந்தி நினைவு பள்ளி

மாட்டுங்கா லேபர் கேம்பில் காந்தி நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தது.

இதில் மாணவி கான் இக்ரா 86.30 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடமும், மொகிதீன் பாத்திமா செய்யது 86 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சேக் நசீரா பியி 82.46 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செல்லத்துரை பாராட்டினார்.

கோவண்டி ராமலிங்கம் ஜூனியர் கல்லூரி

கோவண்டி ராமலிங்கம் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். இந்த கல்லூரியில் தேர்வு எழுதிய 24 மாணவர்களும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவி அனிஷா 86.53 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், சந்தியா 82.30 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடமும், சிவரஞ்சனி 76.84 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனர்.

தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரை பள்ளி நிறுவனர் ராமலிங்கம் மற்றும் முதல்வர் பாராட்டினர்.

சீத்தாகேம்பில் உள்ள பஸ்லானி ஸ்டார் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் 90.24 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். தஸ்மியா பானு 80.61 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், ஹாசிம் அகமது 72 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஹீரா பாத்திமா 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனர்.

Next Story