போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து நூதன மோசடியில் கைதானவர் சிறையில் அடைப்பு
போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து நூதன மோசடியில் கைதானவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அரியாங்குப்பம் ,
புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் லட்சுமணன் அரியங்குப்பத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து அவரிடம் போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து ஏமாற்றி விட்டு ஒரிஜினல் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது44) என்பவரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப்பின் அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் இருந்து ரூ.45 ஆயிரம், 3 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story