சாத்தான்குளம் சம்பவம்: மாநில மனித உரிமை ஆணையம் சிறை காவலர்களிடம் விசாரணை


சாத்தான்குளம் சம்பவம்: மாநில மனித உரிமை ஆணையம் சிறை காவலர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2020 3:45 AM IST (Updated: 17 July 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரி, சிறைக்காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினார்கள். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி குமார் 14-ந் தேதி சாத்தான்குளத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் வைத்து 2-து நாளாக விசாரணை நடத்தினார். இதில் அரசு டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜெயில் சூப்பிரண்டு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று 3-வது நாளாக மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி குமார் விசாரணை நடத்தினார். இதில் கோவில்பட்டி ஜெயிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து சென்ற சிறைக் காவலர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை மாலை வரை நீடித்தது.

இதுகுறித்து விசாரணை அதிகாரி குமார் கூறும்போது, “3-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. சிறைக்காவலர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு, கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று கூறினார்.


Next Story