வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2020 9:30 PM GMT (Updated: 2020-07-17T06:41:58+05:30)

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். நாய்க்கு உள்ள மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றவரும் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை, 

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் வேதமாணிக்கம் (வயது 29). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேதமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை பேட்டை காட்டுநாயக்கர் தெருவை சேர்ந்தவர் வீரமணி மனைவி தங்கமுத்து (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தங்கமுத்து சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தங்கமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்தும் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அம்பை அருகே உள்ள பெரியகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலு மகன் மணிகண்டன் (27). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாய்க்கு உரிய மாத்திரைகளை அதிகமாக தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story